கார்த்திகை விரதம்

 

கார்த்திகை விரதம்.

கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி, மாசந் தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் சுப்ரமணியக் கடவுளைக் குறித்து நோக்கும் விரதம் கார்த்திகை விரதமாகும்.கிருத்திகை எனவும் இது கூறப்படும்.

 

கார்த்திகை நட்சத்திரத்திக்கு முதல் நாளாகிய பரணியில், ஆசாரமக இருந்து, ஒருபோது உண்டு, மறு நாள் (கார்த்திகை நாள்) முருகனை முறைப்படி பூசைசெய்து வழிபாடாற்றி, உபவாசமிருந்து, அடுத்த நாளாகிய ரோகிணியில் பாரணை செய்தல் உத்தமம். இது கைகூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ள வேண்டும். இவ் விரதம் பன்னிரண்டு வருடங்கள் அனுட்டித்தல் வேண்டும். அரிச்சந்திரன், அந்திமான், சந்திமான் ஆகியோர் இவ்விரதத்தை அனுட்டித்துச் சித்திகள் அடைந்ததாக வரலாறு கூறுகின்றது. (அந்திமான், சந்திமான் இடையேறு வள்ளல்கள்.)

 

 

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

Add comment


Security code
Refresh