நவராத்திரி விரதம்

நவராத்திரி விரதம்

 

புரட்டாதி மாதம் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி முடிய வரும்

ஒன்பது நாளும் கும்பத்திலே பூசைசெய்து தேவியை அனுட்டிக்கும்

விரதமாம். இதில் வரும் அட்டமிக்கு கா அட்டமி என்றும் நவமிக்கு

மகா நவமி என்றும் பெயர் இதனால் இதை மகாநோன்பு அல்லது

மகர் நோன்பு என்று சொல்லிக் கொண்டாடுவர்.

 


 

 

இது தேவி உபாசகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விரதமாகும்.

இந்த ஒன்பது இரவுகளிலும் முதல் மூன்று நாட்களிலும் வீரத்தை வேண்டித்

துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்களிலும் செல்வத்தை வேண்டித்

திருமகளையும் இறுதி மூன்று நாட்களும் கல்லியை வேண்டிக்

கலைமகளையும் நினைத்து பூசித்து விரதம் அனுட்டிப்பர்.


நோன்பு நோற்பவர்கள் பிரதமையில் எண்ணெய்  முழுக்காடி

நோன்பைத் தோடங்க வேண்டும். இவ்விரதம் அனுட்டிப்போர்

முதல் எட்டுநாளும் ஒருபோது உணவு  உட்கொண்டு ஒன்பதாவது

நாளான மகாநவமியில் உபவாசம் இருத்தல் உத்தமம். இந்நோன்பு

நாட்களில் அபிராமி அந்தாதி குமரகுருபரரின் சகலகலா வல்லிமாலை

போன்ற பாடல்கள் பாராயணம் செய்யத்தக்கன.

 

 

நாள் இராகம் பிரசாதம் பழம் புஷ்பம் பத்திரம்

1. வது

தோடி

வெண்பொங்கல்,

சுண்டல்

வாழை     மல்லிகை வில்வம்
2. வது கல்யாணி   
 புளியோதரை        மா முல்லை துளசி
3. வது காம்போதி    சக்கரைப் பெங்கல் பலா சம்பங்கி  மரு
4. வது பைரவி கறிச்சாதம், பொரியல் கொய்யா  ஜாதிமல்லிகை கதிர்ப் பச்சை
5. வது பந்துவராளி  தயிர்ச்சாதம் 

மாதுளை 

மாதுளை விபூதிப் பச்சை
6. வது நீலாம்பரி   
தேங்காய்ச்சாதம்
நாரத்தை
செம்பருத்தி
சந்தனை இலை
7. வது பிலகரி  எலுமிச்சம்பழம்  பேரீந்து   தாழம்பூ  தும்பை இலை
8. வது புன்னாக வராளி பாயசம், முறுக்கு திராட்சை
ரோஜா பன்னீர் இலை
9. வது  வசந்தா   திரட்டுப் பால்      நாவல் தாமரை

 மருக்கொழுந்து

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

Add comment


Security code
Refresh