விசேட நாட்கள் 01.09.2018 – 30.09.2018

 

01.09.2018 சனிக்கிழமை கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 400 kr.

 

02.09.2018 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

இன்றைய தினம் சந்தானகோபாலருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

உபயம்: 400 kr.

10.09.2018 திங்கட்கிழமை மணவாளக்கோலம் கும்பாபிஷேகதினம்

ஆலயத்தின் கும்பாபிஷேக தினமான இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விசேடபூசைகளும் நடைபெறும். மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்;

காலை 09:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு விநாயகர் வீதியுலா.

பொது உபயம் 151kr

 

12.09.2018 புதன்கிழமை ஆவணிச்சதுர்த்தி விரதம்

இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா.
உபயம்  1000kr

22.09.2018 - முதலாம் புரட்டாதிச்சனி

23.09.2018 ஞாயிற்றுக்கிழமை நடேசரபிஷேகம் 

இன்றைய தினத்தில் நடேஷருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு அபிசேகம். 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். 

உபயம் 400 kr.

 

24.09.2018  திங்கட்கிழமை - பூரணை விரதம்

இன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா.

உபயம் பூரணை விரதம் 400 kr

 

27.09.2018  வியாழக்கிழமை சந்தானகோபாலர் தினம்

இன்று பகல் சந்தானகோபாலருக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று இரவு விசேட பூசை தீபாராதனைகளுடன் சந்தானகோபாலர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். 

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா. 

உபயம் –1000 kr

 

28.09.2018  வெள்ளிக்கிழமை  சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 400 kr.

29.09.2018 சனிக்கிழமை கார்த்திகை விரதம், இரண்டாம் புரட்டாதிச்சனி

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 400 kr.

 

02.09.2018 ஆவணி ஞாயிறு - 3ம் ஆவணி ஞாயிறு

09.09.2018 ஆவணி ஞாயிறு - 4ம் ஆவணி ஞாயிறு

16.09.2018 ஆவணி கடைசிஞாயிறு - 5ம் ஆவணி ஞாயிறு

குறிப்பு: உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 40087774

Add comment


Security code
Refresh