விசேட நாட்கள் 01.08.2018 – 31.08.2018

 

05.08.2018 ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 400 kr.

 

10.08.2018 வெள்ளிக்கிழமை ஆடி அமாவாசை விரதம்

இன்றைய தினத்தில், பிதிர்த்தர்ப்பணம் மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும்.
பகல்
12:00 மணிக்கு விசேட பூசை நடைபெறும்.

 

13.08.2018 திங்கட்கிழமை ஆடிப்பூரம்

இன்றைய தினத்தில் பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு கருமாரியம்மனிற்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை, அதைத் தொடர்ந்து அம்மன், வீதியுலா

உபயம் ஆடிப்பூரம் 1000 kr.

 

14.08.2018 செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம்

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 400 kr.

 

24.08.2018 வெள்ளிக்கிழமை வரலஷ்சுமி விரதம், திருவிளக்குப்பூசை, நடேசர் அபிஷேகம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும்  நடராஜாப்பெருமானிற்கும் உருத்ராபிஷேகமும் விஷேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அதைத் தொடர்ந்து திருவிளக்குப் பூசையும் நடைபெறும்.

முக்கிய குறிப்பு:

ஆலயத்தில் வரலஷ்சுமிக்காப்புப் பெற்றுக் கொள்ள விரும்பும் அடியார்கள், ஆலயக்குருக்களுடன் தொடர்புகொள்ளவும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம்.

மாலை 7:30 மணிக்கு பூசை ஆரம்பம்.

இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா.

உபயம் 400 kr.

 

25.08.2018  ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்

இன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் பூரணை விரதம்  400 kr.

 

29.08.2018  புதன்கிழமை மஹாசங்கடஹரசதுர்த்தி

இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:
காலை 09:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம்
  1500 kr.

 

குறிப்பு:

07.08.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை - 4ம் ஆடிச்செவ்வாய்க்கிழமை

14.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை 5ம் ஆடிச்செவ்வாய்க்கிழமை

19.08.2018 ஆவணி ஞாயிறு - 1ம் ஆவணி ஞாயிறு

26.08.2018 ஆவணி ஞாயிறு - 2ம் ஆவணி ஞாயிறு

 

ஆடிச்செவ்வாய்க்கு உபயம் எடுக்கவிரும்பும் அடியார்கள், நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 40087774

Add comment


Security code
Refresh