விசேட நாட்கள் 01.03.2018 – 31.03.2018 PDF Print E-mail
Written by Administrator   
Friday, 23 February 2018 12:21

 

01.03.2018  வியாழக்கிழமை - பூரணை விரதம், மாசி மகம்

இன்று பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும், மாலை மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, மாலை அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.  

உபயம் மாசிமகம்      1000kr

உபயம் பூரணை விரதம் 400kr

 

04.03.2018  ஞாயிற்றுக்கிழமை  சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 400 kr.

 

20.03.2018 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் 400 kr.

 

21.03.2018 புதன்கிழமை கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் 400 kr.

 

 

25.03.2018 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீராம நவமி

 

30.03.2018 வெள்ளிக்கிழமை பங்குனி உத்தரம், பூரணை விரதம்

இன்று மாலை சிவனுக்கும், மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

பகல் 12:00 மணிக்கு பூசை.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும் 

இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

உபயம் : பங்குனி உத்தரம்  400 kr

 குறிப்பு:

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 40087774

Last Updated on Friday, 23 February 2018 12:22
 

Add comment


Security code
Refresh