விசேட நாட்கள் 01.02.2018 – 28.02.2018

விசேட நாட்கள்  01.02.2018 – 28.02.2018
 

03.02.2018  சனிக்கிழமை  சங்கடஹரசதுர்த்தி

இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

 

 

13.02.2018  செவ்வாய்க்கிழமை  மஹாசிவராத்திரி விரதம்

சிவராத்திரி பூஜை நாளாகிய இன்றிரவு நான்கு சாமங்களும் சிவனுக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

முதலாம் சாமப் பூசை:  மாலை 18.00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

மாலை 19:00 மணிக்கு முதலாம் சாமப் பூசை ஆரம்பம். கிரியாலிங்க பூசைகள், நித்திய பூசைகள் நடைபெறும்.

 இரண்டாம் சாமப்பூசை: இரவு 20:15 மணிக்கு  சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 21:00 மணிக்கு இரண்டாம் சாமப் பூசை ஆரம்பம். ஸ்படிக்கலிங்க பூசைகள் நடைபெறும்.

மூன்றாம் சாமப்பூசை: இரவு 23.15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

நள்ளிரவு 24:00 மணிக்கு மூன்றாம் சாமப் பூசை ஆரம்பம். இலிங்கோற்பவ பாணலிங்க பூசைகள் நடைபெறும்.

நான்காம் சாமப்பூசை: அதிகாலை 03:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

அதிகாலை 04:00 மணிக்கு நான்காம் சாமப் பூசை ஆரம்பம். மரகதலிங்கப் பூசைகள் நடைபெறும்.

உபயம் – kr. 400,-

 

19.02.2018 திங்கட்கிழமை சதுர்த்தி விரதம்

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும். 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு  விநாயகருக்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 400,-

 

22.02.2018 வியாழக்கிழமை கார்த்திகை விரதம்

இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டப பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.

உபயம் – kr. 400,-

 

28.02.2018 புதன்கிழமை நடேசரபிஷேகம்

சிவனுக்கு  உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

நடேசரபிஷேக உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

உபயம் – kr. 400,-

 குறிப்பு:

தினமும் பகல் 12:00 மணிக்கு பூசை நடைபெறும்.

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்: 40087774

 

 

Add comment


Security code
Refresh