இந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி

 

எமது இந்து சிறார்களின்  பன்னிருதிருமுறையின் பண்ணிசைத்திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் «மஹாசிவராத்திரி»  தினத்தை முன்னிட்டு பண்ணிசைப்போட்டி இவ்வருடமும் நடைபெறவுள்ளது.

 

பேர்கன் இந்துசபையினர் இதற்குரிய ஒழுங்கினைச் செய்துள்ளனர். 

 இடம்  -  Sandgotna skole ,  5172 Loddefjord

காலம்  -    11.02.2018   - ஞாயிற்றுக்கிழமை    13: 00 மணி

விண்ணப்ப முடிவுத்திகதி    - 04.02.2018

 

போட்டி விதிமுறைகள்

1. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாகப்  போட்டிகள் நடைபெறும். 

 

2. தேவாரம்       -  பண்ணுடன் பாடவேண்டும். 

 

3. திருவாசகம்  -   மோகன  இராகத்தில்  அல்லது விருத்தமாகப் பாடுதல் விரும்பத்தக்கது. 

 

4. திருப்புராணம் மத்தியமாவதி இராகத்தில் அமைந்திருத்தல் நல்லது. 

 

5. திருப்புகழ்  - விரும்பிய இராகத்தில் பாடலாம். 4 அல்லது 8 வரிகள் கொண்ட சிறிய திருப்புகழாகத் தேர்ந்தெடுக்கவும். 

 

குறிப்பு  -    சிறார்களை  ஊக்குவிக்கும் நோக்குடன் பங்குபற்றியவர்கள் அனைவருக்கும் 13.02.18 அன்று மாலை 7.00 மணிப்பூஜையின் பின்னர் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படும்.   

பெற்றோர்கள், ஆசிரியர்கள் தயவுசெய்து பிள்ளைகளை ஊக்குவித்துப் போட்டிகளில் பங்கு கொள்ளச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 

அறிவித்தல் -   மஹாசிவராத்திரியை முன்னிட்டு அன்று இரவு ஆலயத்தில் நான்கு  ஜாமப்பூஜைகள்  நடைபெறும்.  அன்று ஆலயத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பங்குபற்ற விரும்புவோர் 04.02.18க்கு முன்னர் நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளவும். 

தொடர்புகளுக்கு  -  குணலிங்கம் பொன்னுத்துரை 91316645 /திருமதி  கமலினி ஜெயதரன்தொலைபேசி இல . 40087774 

அனைவரையும் ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமான் அருள் பெற்றேகுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம். 

(படிவம்இணைக்கப்பட்டுள்ளது.)

 

போட்டிகளுக்கான வயதெல்லை பின்வருமாறு

2014, 2013, 2012

4, 5, 6 வயது மழலை 

தேவாரம்

 

2011, 2010

7, 8 -வயது மழலை -1

தேவாரம்

 

2009, 2008, 2007

9, 10, 11- வயது கீழ்ப்பிரிவு

தேவாரம், திருப்புகழ்

 

2006, 2005, 2004

12, 13, 14- வயது

மேற்பிரிவு

பஞ்சபுராணம் --  தேவாரம், திருவாசகம்,  திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம்.

 

2003, 2002

15, 16- வயது அதிமேற்பிரிவு

பஞ்சபுராணம் --  தேவாரம், திருவாசகம்,  திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம்.

 

-----------------------------------------  இங்கே கிழிக்கவும் ----------------------------------------------------

விண்ணப்ப படிவம் 

 

இந்து சமய பண்ணிசைப்போட்டி   - 2018 

விண்ணப்ப முடிவுத்திகதி    -04.02.2018

 

இடம்  -  Sandgotna skole 5172 Loddefjord

காலம்  -    11.02.2018   - ஞாயிற்றுக்கிழமை   13: 00 மணி

 

 

 

முழுப்பெயர் தமிழ் :___________________________________________________________

 

 

முழுப்பெயர்  ஆங்கிலம் :_______________________________________________________

 

 

பிறந்த திகதி :__________________________________________________________________

 

 

தொலை பேசி இலக்கம் :_______________________________________________________

 

 

 

---------------------------------                 ---------------------------------

பெற்றோர் கையொப்பம்              திகதி 

 

 

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகேமெல்லாம் "

 

நிர்வாக சபை 

பேர்கன் இந்துசபா 

 

-------------------------------------------------------------------------------------

 

Add comment


Security code
Refresh