இந்து சமய பண்ணிசைப்போட்டி - 2017 PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 31 January 2017 09:22

எமது இந்து சிறார்களின்  பன்னிருதிருமுறையின் பண்ணிசைத்திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் «மஹாசிவராத்திரி»  தினத்தை முன்னிட்டு பண்ணிசைப்போட்டி இவ்வருடமும் நடைபெறவுள்ளது.

 

பேர்கன் இந்துசபையினர் இதற்குரிய ஒழுங்கினைச் செய்துள்ளனர். 

 இடம்  -  Sandgotna skole ,  5172 Loddefjord

காலம்  -    18.02.2017   - சனிக்கிழமை  மாலை  17: 00 மணி

விண்ணப்ப முடிவுத்திகதி    -12.02.2017


போட்டி விதிமுறைகள்

1. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாகப்  போட்டிகள் நடைபெறும். 


2. தேவாரம்       -  பண்ணுடன் பாடவேண்டும். 


3. திருவாசகம்  -   மோகன  இராகத்தில்  அல்லது விருத்தமாகப் பாடுதல் விரும்பத்தக்கது. 


4. திருப்புராணம் – மத்தியமாவதி இராகத்தில் அமைந்திருத்தல் நல்லது. 


5. திருப்புகழ்  -     விரும்பிய இராகத்தில் பாடலாம். 4 அல்லது 8 வரிகள் கொண்ட சிறிய திருப்புகழாகத் தேர்ந்தெடுக்கவும். 


குறிப்பு  -    சிறார்களை ஊக்குவிக்கும் நோக்குடன் பங்குபற்றியவர்கள் அனைவருக்கும் 24.02.17 அன்று மாலை 7.00 மணிப்பூஜையின் பின்னர் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படும்.   

பெற்றோர்கள், ஆசிரியர்கள் தயவுசெய்து பிள்ளைகளை ஊக்குவித்துப் போட்டிகளில் பங்கு கொள்ளச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


அறிவித்தல் -   மஹாசிவராத்திரியை முன்னிட்டு அன்று இரவு ஆலயத்தில் நான்கு  ஜாமப்பூஜைகள்  நடைபெறும்.  அன்று ஆலயத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பங்குபற்ற விரும்புவோர் 12.02.17க்கு முன்னர் நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளவும். 

தொடர்புகளுக்கு  -  திருமதி  சாந்தா முருகானந்தம்   தொலைபேசி இல . 92046838 

அனைவரையும் ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமான் அருள் பெற்றேகுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம். 

(படிவம்இணைக்கப்பட்டுள்ளது.)


போட்டிகளுக்கான வயதெல்லை பின்வருமாறு

2013, 2012, 2011

4, 5, 6 வயது மழலை

தேவாரம்

 

2010, 2009

7, 8 -வயது மழலை -1

தேவாரம்

 

2009, 2007, 2006

9, 10, 11- வயது கீழ்ப்பிரிவு

தேவாரம், திருப்புகழ்


2005, 2004, 2003

12, 13, 14- வயது

மேற்பிரிவு

பஞ்சபுராணம் --  தேவாரம், திருவாசகம்,  திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம்.


2002, 2001

15, 16- வயது அதிமேற்பிரிவு

பஞ்சபுராணம் --  தேவாரம், திருவாசகம்,  திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம்.


-----------------------------------------  இங்கே கிழிக்கவும் ----------------------------------------------------

விண்ணப்ப படிவம் 

இந்து சமய பண்ணிசைப்போட்டி   - 2017  

விண்ணப்ப முடிவுத்திகதி    -12.02.2017

 

இடம்  -  Sandgotna skole 5172 Loddefjord

காலம்  -    18.02.2017   - சனிக்கிழமை  மாலை  17: 00 மணி

 


 

முழுப்பெயர் தமிழ் :___________________________________________________________

 

 

முழுப்பெயர்  ஆங்கிலம் :_______________________________________________________

 

 

பிறந்த திகதி :__________________________________________________________________

 

 

தொலை பேசி இலக்கம் :_______________________________________________________

 



---------------------------------                 ---------------------------------

பெற்றோர் கையொப்பம்              திகதி 



"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகேமெல்லாம் "


நிர்வாக சபை 

பேர்கன் இந்துசபா 

 

-------------------------------------------------------------------------------------

Last Updated on Monday, 13 March 2017 11:43
 

Add comment


Security code
Refresh