பாலஸ்தான விஞ்ஞாபனம் 06.07.2016

பாலஸ்தான விஞ்ஞாபனம்.  (06.07.2016) புதன்கிழமை

 

எதிர்வரும் ஆனிமாதம் 23 ஆம் திகதி (06.07.2016) புதன்கிழமை பூசநட்சத்திரமும் சித்தயோகமும் சூகலக்னும் கூடிய சுபவேளையில் பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளது.

 

காலை 08:00 மணியிலிருந்து 9:05 மணி வரையுள்ள சுபமூர்த்தவேளையில்  எம் பெருமானுக்கு பாலஸ்தானம் நடைபெறும்.

 

விநாயகப் பெருமான் அடியார்கள் அனைவரும் இந்த பாலஸ்தான கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து பெருமானின் இஷ்ட சித்திகளைப் பெற்று உய்யுமாறு வேண்டுகின்றோம்.

 

தொடர்ந்து ஆலயத் திருப்பணி வேலைகள் நடைபெறும்.

 

 

புணருத்தாரண பஞ்சகுண்ட பக்ஷ்க்ஷா அஸ்டபந்தன மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம்.  

ஞாயிற்றுக்கிழமை (04.09.2016) 

 

விநாயகப் பெருமான் அடியார்களே!

எதிர்வரும் ஆவணிமாதம் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (04.09.2016) அன்று  பகல் 09:15 மணியிலிருந்து 10:30 மணி வரையில் உள்ள அத்தநட்சத்திரமும் சித்தாமிர்தயோகமும் கன்னிலக்னமும் கூடிய சுபமுர்த்தவேளையில் விநாயகப் பெருமா னுக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம்  நடைபெற  திருவருள் கூடியுள்ளது.

 

அடியார்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து எம்பெருமானின் திருவருளுக்கு பாத்திரமாகுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

 

திருமேனி தீண்டுதல் எண்ணைக்காப்பு சாத்தும் வைபவம் 03.09.2016 சனிக்கிழமை இடம்பெறும்.  தொடர்ந்து மண்டலாபிஷேகமும் நடைபெறும்.

 

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

 

தொடர்புகளுக்கு ஆலயகுருக்கள்: தொலைபேசி எண் 55282245

 

முக்கிய குறிப்பு

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள்

1.  சதாலிங்கம் சிவஞானசுந்தரம் - 94146069,

2.  கமலினி ஜெயதரன்  - 55931454 / 40087774

Add comment


Security code
Refresh