அலங்கார உற்சவ பக்திப் பெருவிழா 2016

 

 

அலங்கார உற்சவ பக்திப் பெருவிழா 2016

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானை
காதலால் கூப்புவர் தம்கை

 

மலைகளும் அருவிகளும் சூழ்ந்திருக்கும் வான்மழையும் பனிமழையும் ஒருங்கிணையப் பொழியும் நோர்வே தேசத்து பேர்கன் மாநகர்தனில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகப்பெருமான் சன்னிதான 12ம் ஆண்டு துர்முகிவருட அலங்கார உற்சவப் பெருவிழா.

நிகழும் மங்களகரமான துர்முகிவருடம் உத்தராயண வைகாசி மாதம் 7ம் நாள் (20.05.2016) வெள்ளிக்கிழமை வளர்பிறை சதுர்த்தி திதியும் விசாக நட்சத்திரமும் கூடிய சுப மங்களநாளில் ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகப்பெருமானிற்கு அலங்கார உற்சவப் பெருவிழா நடைபெற இறையருள் கூடியுள்ளது.

விநாயகப்பெருமான் அருள்பெற‍ அனைவரையும் சன்னிதானத்திற்கு பெரும் திரளாக வருகைதந்து சகல நலனும் பெற்றேகும் வண்ணம் வேண்டுகின்றோம்.

 

உற்சவ ஆரம்பம் 20 .05.2016 வெள்ளிக்கிழமை

 

உற்சவ பூர்த்தி 31.05.2016 செவ்வாய்கிழமை

அபிசேக பூசை - கிரியாகால விபரம்

 

19.05.2016 வியாழக்கிழமை

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 6:00 மணிக்கு விநாய‍கவழிபாடு, அநுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

20.05.2016 வெள்ளிக்கிழமை - 1 ம் திருவிழா (வைகாசி விசாகம்)

 

இன்றைய தினத்தில் வழமைபோல் அலங்கார உற்சவ பூசைகளும், வைகாசி விசாகத்தையொட்டி முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 

மாலை 5:30 முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் விநாயகப்பெருமானிற்கும் விசேட அபிசேகம் நடைபெறும். மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான், முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

உபயம் –  kr. 1500,-

உபயம் வைகாசி விசாகம் – kr. 350,-

                                                                                   

21.05.2016 சனிக்கிழமை – 2 ம் திருவிழா பூரணை விரதம், தீப பூசை 

இன்றைய தினத்தில் வழமைபோல் அலங்கார உற்சவ பூசைகளும், பூரணையையொட்டி கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகமும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:30 மணிக்கு மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் விநாயகப்பெருமானிற்கும் விசேட அபிசேகம் நடைபெறும்.

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, விளக்குப் பூசை, அம்மன், விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் திருவிழா –  kr. 1500,-

உபயம் பூரணை விரதம் – kr. 350,-

 

22.05.15 ஞாயிற்றுக்கிழமை – 3 ம் திருவிழா

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா  

உபயம் –  kr. 1500,-

 

23.05.2015 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் –  kr. 1500,-

 

24.05.2016 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

 மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் திருவிழா – kr. 1500,-

 

25.05.2016 புதன்கிழமை – 6 ம் திருவிழா - சங்கடகரசதுர்த்தி

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் – kr. 1500,-

 உபயம் - சங்கடகரசதுர்த்தி விரதம் – kr. 350,-

 

 26.05.2016 வியாழக்கிழமை – 7 ம் திருவிழா

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் திருவிழா – kr. 1500,- 

 

27.05.2016 வெள்ளிக்கிழமை சப்பறத்திருவிழா

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா  

 உபயம் –  kr. 1500,-

 

28.05.2016 சனிக்கிழமை தேர்த்திருவிழா

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 8:45 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானுக்கு விசேட அஷ்டோத்திர சங்காபிஷேகம், விசேட திரவிய ஹோம அபிசேகம்  நடைபெறும்

காலை 10:00 மணிக்கு பூசை ஆரம்பம்

காலை 10:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசைவேதபாராயணம், திருமுறை ஓதல்

காலை 11:30 மணிக்கு தேர் வீதிவலம், பிராச்சித்த அபிசேகம்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் –  kr. 1500,-

 

29.05.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத்திருவிழா

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 8:45 மணிக்கு மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானுக்கு விசேட அபிசேகம்

காலை 10:00 மணிக்கு பூசை ஆரம்பம்

காலை 10:30 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை

காலை 11:15 மணிக்கு தீர்த்த உற்சவவிழா, விநாயகப்பெருமான் வீதியுலா

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா, ஆச்சார்யா உற்சவம் 

உபயம் – kr. 1500,-

 

30.05.2016 திங்கட்கிழமை –  பூங்காவனம்

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சந்தமண்டப விசேட பூசை, ஊஞ்சல்விழா  விநாயகப்பெருமான் வீதியுலா   

உபயம் –  kr. 1500,-

 

31.05.2016 செவ்வாய்கிழமை –  வைரவர் மடை

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 6:00 மணிக்கு வைரவருக்கு விசேட அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

உபயம் –  kr. 400,-

 

இவ்விழாவை ஸ்தானிக சிவாச்சாரியார் ஸ்ரீ ஆனந்தராஜா குருக்களும் உதவிக்குரு பிரம்மஸ்ரீ சுந்தரேச சர்மா அவர்களும் சேர்ந்து சிறப்பாக நடாத்துவார்கள்.

 

குறிப்பு: அபிசேகங்கள் பூசைகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பிக்கும் என்பதை அடியார்களிற்கு அறியத் தருகிறோம்.

 

சுபமங்களம்

அனைவரும் வருக! திருவருள் பெறுக!

இங்ஙனம்

உபயகாரர்கள் - ஆலய நிர்வாகசபையினர்

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்

தொலைபேசி எண்: 55931454;               கைத்தொலைபேசி: 40087774

Add comment


Security code
Refresh