விசேட நாட்கள் 01.01.2015 – 31.01.2015 PDF Print E-mail
Written by பேர்கன் இந்து சபா   
Wednesday, 17 December 2014 09:26

விசேட நாட்கள் 01.01.2015 – 31.01.2015

01.01.2015 வியாழக்கிழமை – புது வருட சிறப்பு பூசை கார்த்திகை விரதம்

புது வருட நாளாகிய இன்று விஷேட பூசை இடம்பெறும். 

மதியம் 1200-மணிக்கு புது வருஷ விஷேட பூசை நடைபெறும். 

ஆண்டு 2015-ற்கான நாளேடு ஆலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். 

 

கார்த்திகை விரதம்

 

புது வருட சிறப்பு பூசையை அடுத்து இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று,முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

மாலைப்பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

04.01.2015 ஞாயிற்றுக்கிழமை – திருவெம்பாவை பூர்த்தி, நடேசர் ஆருத்ரா தரிசனம், பூரணை விரதம்

 

திருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, நடேசர்

வீதியுலா வரும் காட்சியும்  நடைபெறும்.

அதிகாலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

அதிகாலை 5:45 மணிக்கு பூசை ஆரம்பம்

உபயம் – kr. 350,-

 

- பூரணை விரதம்

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்

வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் –  kr. 350,- 

 

08.01.2015 வியாழக்கிழமை – சங்கடகர சதுர்த்தி

 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

உபயம் – kr. 350,-

 

14.01.2015 புதன்கிழமை – தைப்பொங்கல்

இன்றைய தினம் பகலில் பொங்கலும்இ விசேட பூசைகளும் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும்.  

பகல் 10:00 மணிக்கு பொங்கல் 

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  

 

23.01.2015 வெள்ளிக்கிழமை – சதுர்த்தி விரதம்  

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 07:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்   

இரவு 08:15 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் –  kr. 350,-

 

28.01.2015 புதன்கிழமை – கார்த்திகை விரதம் 

இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும் 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 

உபயம் – kr. 350,-

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை

பேர்கன் இந்து சபா

Last Updated on Tuesday, 02 June 2015 07:35
 

Add comment


Security code
Refresh