விசேட நாட்கள் 01.09.2014 – 30.09.2014 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Wednesday, 13 August 2014 20:13

விசேட நாட்கள் 01.09.2014 – 30.09.2014

 

05.09.2014 வெள்ளிக்கிழமை – மணவாளக்கோலம் வருஷாபிஷேகம்
 
ஆலயத்தின் கும்பாபிஷேக தினமான இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெறும்.
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
காலை 09:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
 
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
பொது உபயம் kr. 101,-

 

07.09.2014 ஞாயிற்றுக்கிழமை – நடேசரபிஷேகம்


இன்றைய தினத்தில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 06:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் –  kr. 350,-

 

08.09.2014 திங்கட்கிழமை – பூரணை விரதம்


மாலை கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்றுஇ அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

11.09.2014 வியாழக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 
 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-

 

13.09.2014 சனிக்கிழமை – கார்த்திகை விரதம்


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

20.09.2014 சனிக்கிழமை – 1ம் புரட்டாதிச்சனி 


இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திருக்கும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

நவராத்திரி விரதம்: 24.09.2014 தொடக்கம் 03.10.2014 வரை நடைபெறும்

குறிப்பான நவராத்திரி தினங்கள்:

24.09.2014 புதன்கிழமை 1ம் நாள் துர்க்கா பூஜை ஆரம்பம்
27.09.2014 சனிக்கிழமை 4ம் நாள்- இலட்சுமி பூஜை  ஆரம்பம்         
30.09.2014 செவ்வாய்க்கிழமை 6ஆம் நாள்- சரஸ்வதிபூஜை ஆரம்பம்         
02.10.2014 வியாழக்கிழமை – 9ஆம் நாள்-மஹாநவமி
03.10.2014 வெள்ளிக்கிழமை - விஜயதசமி

நவராத்திரியின் போது கருமாரியம்மனுக்கு நாளாந்தம் உருத்ராபிஷேகமும் விஷேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்;பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் நவராத்திரி 1 - 9ஆம் நாள் வரை – kr. 350,-
உபயம் நவராத்திரி 10 ஆம் நாள்       - kr. 500,-


வேண்டுகோள்:

நவராத்திரி தினங்களில் கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். ஒருவருக்கு, நிர்வாகசபையினரால் இதற்க்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரம் 20 நிமிடங்களே.

தொடர்புகளுக்கு: துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114)

 

27.09.2014 சனிக்கிழமை – சதுர்த்தி விரதம்


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்திராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும். அத்துடன் நவராத்திரி பூஜையும் மேற்கண்டவாறு நிகழ்ச்சிநிரலுடன் வழமைபோல் இடம்பெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம், சதுர்த்தி– kr. 350,-
உபயம், நவராத்திரி– kr. 350,-

 


உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Wednesday, 13 August 2014 20:23
 

Add comment


Security code
Refresh