விசேட நாட்கள் 01.04.2014 – 30.04.2014 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Monday, 17 March 2014 09:51

விசேட நாட்கள் 01.04.2014 – 30.04.2014


03.04.2014 வியாழக்கிழமை – சதுர்த்தி கார்த்திகை விரதம்


இன்றைய தினத்தில் விநாயகர் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப் பெருமானுடன் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

08.04.2011 செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ ராம நவமி 


இன்றைய தினத்தில் ராமர் சீதை லக்ஷ்மணன் அனுமார் ஆகியோரிற்கு அபிசேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
உபயம் –  kr. 350,-

 

 

14.04.2014 திங்கட்கிழமை – சித்திரை வருடப்பிறப்பு சித்திராப் பூரணை.


இன்றைய தினம் புண்ணிய காலத்தில் விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

மாலை சித்திராப்பூரணையை முன்னிட்டு கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் அபிஷேகம் இடம்பெற்றுää  தீபாராதனைகளுடன் விசேடபூசை நடைபெறும். பின்னர் அம்மனுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.
  
பூசை நேரம் பற்றிய விபரங்கள்


காலை 09:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
மதியம் 1200 மணிக்கு புதுவருட விசேடபூசை ஆரம்பமாகும்.
 
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம், அபிஷேகம்;
மாலை 7:00 மணிக்கு பூசை
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா

”ஜய” தமிழ் புதுவருடம் பிறக்கும் நேரம் காலை 04:06 மணி.
இது வள்ளுவர் ஆண்டு 2045 ஆக கணிக்கப்பட்டுள்ளது.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
நண்பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்

உபயம்:
புதுவருடம் - பொது உபயம் -  kr. 100,-
பூரணை                -  kr. 350,-

குறிப்பு: 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 தொடக்கம் இரவு 8.00 மணி ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்

 

18.04.2014 வெள்ளிக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் –  kr. 350,-


22.04.2014 செவ்வாய்க்கிழமை – நடேசரபிஷேகம்


இன்றைய தினத்தில் நடேஷருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் –  kr. 350,-


30.04.2014 வியாழக்கிழமை – கார்த்திகை விரதம்


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

 

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.


நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Tuesday, 25 March 2014 09:24
 

Add comment


Security code
Refresh