-விசேட நாட்கள் 01.09.2013 – 30.09.2013

விசேட நாட்கள் 01.09.2013 – 30.09.2013

 

08.09.2013 ஞாயிற்றுக்கிழமை – விநாயக சதுர்த்தி விரதம்.


இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று,
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 05:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.
 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

15.09.2013 ஞாயிற்றுக்கிழமை - மணவாளக்கோலம் வருஷாபிஷேகம்.

 

ஆலயத்தின் கும்பாபிஷேக தினமான இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும், சுற்றுப்பிரகாரத்திற்கு உருத்ராபிஷேகமும் பூசைகளும் நடைபெறும்.
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


பகல் 09:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
 
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
 

பொது உபயம் kr. 101,-

 

18.09.2013 புதன்கிழமை – பூரணை விரதம் ,நடேசரபிஷேகம்.

 

இன்றைய தினத்தில் கருமாரியம்மன், மீனாட்சியம்மன் மற்றும் சிவனுக்கும் உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்


மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா


உபயம், பூரணை – kr. 350,-

உபயம்,  நடேசரபிஷேகம் – kr. 350,-

 

21.09.2013 சனிக்கிழமை - 1ம் புரட்டாதிச்சனி.

இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு
எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திருக்கும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

  22.09.2013 ஞாயிற்றுக்கிழமை  -சங்கடகரசதுர்த்தி, சந்தானகோபாலர் தினம்.

 

 இன்றைய தினத்தில் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் தீபாராதனைகளுடன் விசேடபூசையும் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து சந்தானகோபாலருக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று,
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் சந்தானகோபாலர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 


பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.


உபயம்,
சங்கடகரசதுர்த்தி – kr. 350,-

உபயம், சந்தானகோபாலர் தினம் - kr. 1.௦௦௦,-

 

 23.09.2013 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்.


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:


மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா


உபயம், கார்த்திகை – kr. 350,-

 

 

 

28.09.2013 சனிக்கிழமை - 2ம் புரட்டாதிச்சனி.

இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு
எள்ளெண்ணெய் எரிப்பதற்காகத் திறந்திருக்கும்.

 

 

இத் தினங்களில் உபயம் எடுக்க விரும்புவோர்,  துஷ்யந்தி குபாலா , தொலைபேசி இல. 410 11 114 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை,
பேர்கன் இந்து சபை.

 

 

 

 


 

Add comment


Security code
Refresh