-விசேட நாட்கள் 01.06.2013 – 30.06.2013 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Friday, 07 June 2013 08:28

ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம்

விசேட நாட்கள் 01.06.13 – 30.06.13


06.06.2013 வியாழக்கிழமை – கார்த்திகை விரதம்


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு  7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

 


12.06.2013 புதன்கிழமை –சதுர்த்தி விரதம்


இன்று மாலை விநாயகப்பெருமானிற்கு உருத்திராபிஷேகம்; நடைபெற்று விசேட பூசை தீபாராதனைகளும் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 17:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 19:00 மணிக்கு பூசை ஆரம்பம்

உபயம் சதுர்த்தி –  kr. 350,-

 

23.06.2013 ஞாயிற்றுக்கிழமை – பூரணை விரதம் 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா 
உபயம் –  kr. 350,-

 

26.06.2012 புதன்கிழமை – சங்கடகர சதுர்த்தி 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு  7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-

 

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள்: துஷ்யந்தி, தொலைபேசி இல. 410 11 114 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபை
 

Last Updated on Wednesday, 19 June 2013 09:11
 

Add comment


Security code
Refresh