-விசேட நாட்கள் 01.04.2013 – 30.04.2013

விசேட நாட்கள் 01.04.2013 – 30.04.2013


13.04.2013 சனிக்கிழமை – கார்த்திகை விரதம்;


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

 

14.04.2013 ஞாயிற்றுக்கிழமை – சித்திரை வருடப்பிறப்பு சதுர்த்தி விரதம் 


இன்றைய தினம் பகல் விநாயகப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகமும் பரிவாரமூர்த்திகளிற்கு அபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெறும். இரவு  விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும். 


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


காலை 8:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
நண்பகல் 12:00 மணிக்கு புதுவருடப்பிறப்பு விசேடபூசை ஆரம்பமாகும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
பொது உபயம் - kr. 100,-


குறிப்பு: 13.04.2013 சனிக்கிழமை மாலை 5.00 தொடக்கம் இரவு 9.00 மணி ஆலயத்தில் மருத்து நீர் பெற்றுக் கொள்ளலாம்

 

 

 

19.04.2013 வெள்ளிக்கிழமை – ஸ்ரீ ராம நவமி 


இன்றைய தினத்தில் ராமா சீதை லக்ஷ்மணன் அனுமாரிற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 6:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
உபயம் – kr. 350,-

 

 

25.04.2013 வியாழக்கிழமை – சித்திரா பூரணை விரதம் சித்திரகுப்த விரதம் 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன்
வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்தது  அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

 

 

28.04.2013 ஞாயிற்றுக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-

 

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி  பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 ஃ 992 99 864 அவர் களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Add comment


Security code
Refresh