-விசேட நாட்கள் 01.01.2013 – 31.01.2013

விசேட நாட்கள் 01.01.2013 – 31.01.2013

 

14.01.2013 திங்கட்கிழமை – தைப்பொங்கல், சதுர்த்தி விரதம்


இன்றைய தினம் பகல் பொங்கலும் விசேட பூசைகளும் நடைபெறும். மாலையில்  விநாயகருக்கு உருத்ராபிஷேகம் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் விநாயகர் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.

பூசை நேரம் பற்றிய விபரங்கள்
10:00 மணிக்கு பொங்கல்
12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
17:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
19:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
19:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

 

21.01.2013 திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்


இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகம் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


17:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
19:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
19:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

 

26.01.2013 சனிக்கிழமை – தைப்பூசம், பூரணை விரதம் 


இன்று பகல் முருகன் வள்ளி தெய்வயானைக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெறும். மாலையில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகம் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்ற பின்னர் அம்மன், முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.  
 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

17:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் 

19:00 மணிக்கு பூசை ஆரம்பம்
19:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் தைப்பூசம் – kr. 1.000,-
உபயம் பூரணை விரதம் – kr. 350,-

 

 

30.01.2013 புதன்கிழமை – சங்கடகர சதுர்த்தி 

இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


17:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
19:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
உபயம் –  kr. 350,-


 

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா

Add comment


Security code
Refresh