- வருடாந்த அலங்கார உற்சவ பெரும் சாந்தி விழா

அருள்மிகு ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயக சுவாமி தேவஸ்தானம் 6 ம் ஆண்டு வருடாந்த அலங்கார உற்சவ பெரும் சாந்தி விழா 21.05.2010 தொடங்கி 01.06.2010 வரை நடைபெறும்.

 விநாயகர்  அடியார்களே !!!

குளிரும் ஒளிரும் தனிரும் தலையாட்ட மேரு ஏழுமலைச் சாரலோரம் நள்ளிரவுச் சூரிய நாட்டின் நோர்வே பேர்கன் மாநகாரில் தும்பிக்கை கொண்டு வினைதீர்க்கும் ஆனந்தசித்தி விநாயக சுவாமிக்கு நிகழும் மங்களகரமான விகிர்தி வருடம் உத்தராயண வைகாசி மாத 21.05.2010 7ம் நாள் வளர்பிறை அஸ்டமியும் சுபயோகமும் பூரம் நட்சத்திரமும் கூடிய சுபநாளில் வருடாந்த அலங்கார உற்சவம் நிகழத் திருவருள் கூடியுள்ளது. 11 நாட்கள் திருவிழா நடைபெறும். அனைவரும் ஒன்றினைந்து ஆலயத்துக்கு வருகை தந்து சகல செல்வங்களும் பெற்று உய்யுமாறு வேண்டுகிறேம்.

அபிஷேக பூஜைகிரியாகால விபரம்   

20.05.10 வியாழக்கிழமை
மாலை 6.00 மணிக்கு விநாயகவழிபாடு அநுக்ஞை கணபதி ஹோமம் வாஸ்த்துசாந்திகள்.
21.05.10
வெள்ளிக்கிழமை தொடக்கம் 28.05.10 வெள்ளிக்கிழமை வரை
 • 
மாலை தினமும் 5:30 மணிக்கு அபிஷேகம்
• 
மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை
 • 
மாலை 7:25 மணிக்கு வசந்தமண்டப விஷேட தீபாராதனை சுவாமி வீதிவலம்  தரிசனம் காட்சி.

 

28.05.10 வெள்ளிக்கிழமை சப்பறத்திருவிழா

29.05.10 சனிக்கிழமை தேர்த்திருவிழா
 • 
காலை 8:30 மணிக்கு விநாயகப்பெருமானுக்கு விஷேட(109) நவோத்தரசத சங்காபிஷேகம் விஷேட திரவிய ஹோமம்
• 
காலை 10:00 மணிக்கு மூலவருக்கு விஷேடபூஜை   
• 
காலை 10:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட தீபாராதனை பஞ்சமுக அர்ச்சனை வேதபாராயணம் திருமுறை ஓதல் ஆசீர்வாதம்
 • 
காலை 11:15 மணிக்கு தேர் பவனிவரும் காட்சி
பிராச்சித்த அபிஷேகம் பஞ்சமுகார்ச்சனை.

30.05.10 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத்திருவிழா
• 
காலை 8:30 மணிக்கு மூலவருக்கு விஷேட அபிஷேகம்
• 
காலை 10:00 மணிக்கு மூலவருக்கு விஷேட பூஜை
• 
காலை 10:30 மணிக்கு வசந்தமண்டப விஷேட தீபாராதனை சுவாமி வீதிவலம் தாpசனம் காட்சி
• 
காலை 11:30 மணிக்கு தீர்த்த உற்சவவிழா
• 
மாலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி பூஜை
• 
மாலை 7:25 மணிக்கு வசந்தமண்டப விஷேட தீபாராதனை சுவாமி வீதிவலம் தரிசனம் காட்சி.   

31.05.10 திங்கட்கிழமை பூங்காவனம்
• 
மாலை 5:30 மணிக்கு மூலவருக்கு விஷேட ஸ்ணபநா அபிஷேகம்
• 
மாலை 7:00 மணிக்கு மூலவருக்கு பூஜை
• 
மாலை 7:30 மணிக்கு வசந்த மண்டப விஷேட தீபாராதனை (டொலோற்சவம்) ஊஞ்சல்விழா சுவாமி வீதிவலம் தரிசனம் காட்சி;.

01.06.10 செவ்வாய்க்கிழமை வைரவர் சுவாமிமடை
• 
மாலை 6:00 மணிக்கு வைரவருக்கு அபிஷேகம்
• 7:00
மணிக்கு விஷேட பூஜை.

இவ்விழாவை ஆலயக்குருமணி கிரியாமாமணி
சிவஸ்ரீ பா. ஸ்ரீராமச்சந்திரக்குருக்கள் அவர்களும்
உதவிக்குரு சிவாகம பானு பா. சித்திராங்ககுருக்கள் அவர்களும் சேர்ந்து சிறப்பாக நடாத்துவார்கள். இவர்களுடன் இன்னும் பல சிவாச்சாரியார்கள் கலந்து சிறப்பிப்பார்கள்.

விழாக்காலங்களில் தினமும் விஷேட சமய சொற்பொழிவு இடம்பெறும்.
குறிப்பு: திருவிழாக்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பிக்கும் என்பதை அடியார்களிற்கு அறியத்தருகிறோம்.

சுபமங்களம்
அனைவரும் வருக! திருவருள் பெறுக!

 இங்ஙனம்
ஆலய நிர்வாக சபையினர் - உபயகாரர்கள்

Add comment


Security code
Refresh