-விசேட நாட்கள் 01.01.2012 – 31.01.2012 PDF Print E-mail
Written by Styret.   
Friday, 30 December 2011 10:29

விசேட நாட்கள் 01.01.2012 – 31.01.2012


04.01.2012 புதன்கிழமை – வைகுண்ட ஏகாதசி விரதம்


இன்று பகல் நாராயணனுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று,
மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.  


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
பகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
மாலை 7:45 மணிக்கு நாராயணன் வீதியுலா
உபயம் –  kr. 1.000,-

05.01.2012 வியாழக்கிழமை – கார்த்திகை விரதம்


இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

07.01.2012 சனிக்கிழமை – நடேசரபிஷேகம்


இன்றைய தினத்தில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் –  kr. 350,-


08.01.2012 ஞாயிற்றுக்கிழமை – திருவெம்பாவை பூர்த்தி 


திருவெம்பாவையின் இறுதி நாளான இன்று அதிகாலையில் நடேசருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, நடேசர் வீதியுலா வரும் காட்சியும்; நடைபெறும்.


காலை 5:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
காலை 5:45 மணிக்கு பூசை ஆரம்பம்
உபயம் –  kr. 350,-


பூரணை விரதம் 


இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350 ,-

 

12.01.2012 வியாழக்கிழமை – சங்கடகர சதுர்த்தி 
இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கல்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் –  kr. 350,-

15.01.2012 ஞாயிற்றுக்கிழமை – தைப்பொங்கல்
இன்றைய தினம் பகலில் பொங்கலும்இ விசேட பூசைகளும் மாலையில் விசேட பூசைகளும் நடைபெறும். 
பகல் 10:00 மணிக்கு பொங்கல்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 

26.01.2012 வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம் 
இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்றுஇ விநாயகர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
மாலை 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் –  kr. 350,-

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Wednesday, 21 November 2012 00:24
 

Add comment


Security code
Refresh