-விசேட நாட்கள் 01.09.2013 – 30.09.2013

விசேட நாட்கள் 01.09.2013 – 30.09.2013

 

08.09.2013 ஞாயிற்றுக்கிழமை – விநாயக சதுர்த்தி விரதம்


இன்று பகல் விநாயகருக்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று இரவு விசேட பூசை தீபாராதனைகளும் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


காலை 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து சங்காபிஷேகம் நடைபெறும்.

இரவு 7:00 மணிக்கு விசேட தீபாராதனைகளுடன் பூசை ஆரம்பமாகும்.

இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.


உபயம் kr.1.500,- 

 

 

15.09.2013 ஞாயிற்றுக்கிழமை – மணவாளக்கோலம் - வருஷாபிஷேகம் 

ஆலயத்தின் கும்பாபிஷேக தினமான இன்று பகல் விநாயகப்பெருமானிற்கு அஷ்டோத்திர சங்காபிஷேகமும் சுற்றுப்பிரகாரத்திற்கு படிக்கட்டு அபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெறும். மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


காலை 08:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்
 
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
பொது உபயம் kr. 101,-

 

18.09.2013  புதன்கிழமை – பூரணை விரதம்இ நடேசரபிஷேகம்  


இன்று மாலை கருமாரியம்மன் மீனாட்சியம்மன் மற்றும் சிவலிங்கப்பெருமானுக்கு உருத்ராபிஷேகத்துடன் விசேட பூசை தீபாராதனைகள் நடைபெற்று அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்
இரவு 7:45 மணிக்கு அம்மன் வீதியுலா.


உபயம்  பூரணை – kr. 350,-
உபயம்  நடேசரபிஷேகம் – kr. 350,-


21.09.2013 சனிக்கிழமை – 1ம் புரட்டாதிச்சனி 


இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வர பகவானிற்கு எள்ளெண்ணை ஏற்றுவதற்க்காக திறந்திருக்கும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்


பகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

22.09.2013 ஞாயிற்றுக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி, சந்தானகோபாலர் தினம்


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் தீபாராதனைகளுடன் விசேடபூசையும் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து சந்தானகோபாலருக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று இரவூ விசேட பூசை தீபாராதனைகளுடன் சந்தானகோபாலர் வீதியூலா வரும் காட்சியும் நடைபெறும்


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

காலை 10:00 - சங்கற்பம் அதைத் தொடர்ந்து சந்தானகோபாலருக்கு அபிஷேகம் நடைபெறும்.

மதியம் 12:00 – பூசை ஆரம்பம்.

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 


உபயம்: சங்கடகர சதுர்த்தி – kr. 350,-
உபயம்: சந்தானகோபாலர் தினம்– kr. 1000,-


 

23.09.2013  திங்கட்கிழமை – கார்த்திகை விரதம்;


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியூம் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா


உபயம் – kr. 350,-

 
28.09.2013 சனிக்கிழமை – 2ம் புரட்டாதிச்சனி 


இன்று பகல் 11:30 மணி தொடக்கம் 02:00 மணி வரை ஆலயம் சனீஸ்வரனிற்கு எள்ளெண்ணெய் ஏற்றுவதற்காக திறந்திருக்கும்.

இரவு  7:00 மணிக்கு வழமைபோல் பூசை ஆரம்பமாகும்

 

உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் துஷ்யந்தி குணபாலா(தொலைபேசி இல. 410 11 114) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

 

நிர்வாகசபை,
பேர்கன் இந்து சபா 

Add comment


Security code
Refresh