- நன்றியுரை / 6 ம் ஆண்டு வருடாந்த அலங்கார உற்சவம்

அருள்மிகு ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயக சுவாமி தேவஸ்தானம்

நன்றியுரை  

அருள்மிகு ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகர் ஆலயத்தின் 6 ம் ஆண்டு வருடாந்த அலங்கார உற்சவம் 21.05.10 அன்று தொடங்கி இன்று 11 ம் நாளான பூங்காவானத்திருவிழாவினை நிறைவு செய்யூம் நேரத்தில் இந்த 11 நாட்கள் உற்சவத்தையூம் சிறப்பாக நடாத்த உதவிய அனைவரிற்கும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது.  

 
 
இவ்வருட அலங்கார உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள், சுவாமியின் அலங்காரங்கள், சிவாச்சாரியார்களின் மந்திர உச்சரிப்புகள் எல்லாம் நன்றாக இருந்ததாகவும், தாம் தமது ஊர்களில் பார்த்ததும் கேட்டதும் போல் இருந்தது என்றும் பல பேர் கூறக்கேட்டேன்.  இப்படி ஒரு அனுபவத்தை அடியார்களிற்கு வழங்கிய எமது ஆலயக்குருமணி கிரியாமாமணி சிவஸ்ரீ பா. ஸ்ரீராமச்சந்திரக்குருக்கள் அவர்களுக்கும் , உதவிக்குரு சிவாகம பானு பா. சித்திராங்ககுருக்கள் அவர்களுக்கும், விநாயகர் அடியார்கள் சார்பாகவும் பேர்கன் இந்து சபா சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  தேர் உற்சவத்தின் போது வந்து சிறப்பித்த பிரம்மஸ்ரீ ந. நித்தியானந்த சர்மா அவர்களுக்கும் அவரது புத்திரர்களிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.   எமது ஆலயக்குருமணிக்கு துணையாக இருந்து பல உதவிகளைச் செய்த அவரது துணைவியாரிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

இவ்வருட அலங்கார உற்சவத்திற்கு உபயம் எடுத்தவார்கள் பொருளுதவிகள் செய்தவர்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இவ்வருட அலங்கார உற்சவத்தின் போது அன்னதானம் தயாரிக்க உதவிகள் செய்தவர்கள், அன்னதானத்திற்கு பொருளுதவிகள் வழங்கியவர்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

இவ்வருட அலங்கார உற்சவத்தின் போதும் அதற்கு முன்பும் சரீர உதவிகள் செய்த அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

இவ்வருட அலங்கார உற்சவத்தின் போது சிறப்பான தரமான கலைநிகழ்ச்சிகளை வழங்கிய சிறுவர்கள் அவர்களை ஊக்குவித்த பெற்றோர்கள் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை வழங்கிய பெரியவர்கள் கலைநிகழ்ச்சிகளின் போது ஒலி ஒளி அமைப்பு செய்ய உதவியவார்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.   

 

அலங்கார உற்சவ செய்திகளையும் புகைப்படங்களையும் உடனுக்குடன் வெளியிட்ட இணையத்தளக் குழுவிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

இவ்வருட அலங்கார உற்சவத்தின் போது ஆலயத்திற்கு வந்து  அபிஷேகங்கள், பூஜைகளில் கலந்து கொண்ட அனைத்து அடியார்களிற்கும் மற்றும்; எல்லா வகைகளிலும் உதவிய அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  

 

இவ்வருட அலங்கார உற்சவத்தினை எமக்கு முன்பிருந்த நிர்வாகசபையும் தற்போதைய நிர்வாகசபையும் சேர்ந்து தான் நடத்துகினோம். முன்பிருந்த நிர்வாகசபை இட்ட அத்திவாரம் தான்
இவ்வருட உற்சவம் சிறப்பாக நடப்பதற்கு காரணமாக இருந்தது. நாம் ஒரு மாதத்திற்கு முன்பு பொறுப்பெடுத்ததிலிருந்து அவர்கள் தேவையான நேரத்தில் தேவையான உதவிகளைச் எங்களிற்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  

 தற்போதைய நிர்வாகசபை அங்கத்துவர்கள் அனைவரும் தமக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை பொறுப்புடனும் சரியான நேரத்திற்கும்
செய்து முடித்தார்கள்.  அவர்களிற்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.   

இந்த நன்றியுரையில் யாரிற்காவது நாம் நன்றி கூற மறந்திருந்தால் தயவுகூர்ந்து மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இந்த அலங்கார உற்சவம் மிகச் சிறப்பாக நடக்க உதவிய ஒத்துழைத்த அனைவரும் தொடார்ந்தும் உங்களது ஒத்துழைப்பையும்
ஆதரவையும் வழங்க வேண்டும் என தாழ்மையாக கேட்டுக் கொள்கிறோம்.
 
இவ்வாலயம் மென்மேலும் வளர புதிய கருத்துகள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகசபை அங்கத்துவர்களுடன் நேரடியாகவோ அல்லது தொலைபேசியுடாகவோ தொடர்பு கொண்டு நீங்கள் அவற்றை தெரிவிக்கலாம். அல்லது எமது இணையத்தளம்  bergenhindusabha.info ஊடாக தொடார்பு கொள்ளலாம்.

எல்லோரும் சந்தோஷமாக வந்து விநாயகப் பெருமானை தரிசித்து மனநின்மதியுடன் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமாகும். அப்படியான ஒரு சூழ்நிலை ஆலயத்தில் அமைய நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தாழ்மையாக கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி !!!

நிர்வாகசபை
போர்கன் இந்து சபா
 

Comments 

 
0 #1 luigi4235 2015-02-17 08:31
(╯°□°)--︻╦╤─ - - -
+++thatsafunnypic.com+++
Quote
 

Add comment


Security code
Refresh