BergenHinduSabha

ஆனி உத்தரம்

ஆனி உத்தரம்

நடராசப்பெருமானுக்கு நடைபெறும் விஷேட அபிஷேகங்களில் ஆனி உத்தரம் மிகச்சிறந்தது. நடராசப்பெருமானுக்கு வருடத்தில் ஆறு விஷேட அபிஷேகங்கள் நடைபெறுவதுண்டு. மானுடவருடம்(மனிதர்க்கு ஒன்று) தேவர்களுக்கு ஒரு நாள்.
ஆறு நேரங்களாவன :

 

                 அதிகாலை -   மார்கழி (திருஅனந்தல்)
                 காலைச்சந்தி -  மாசி
                 உச்சிக்காலம் -  சித்திரை
                 சாயூங்காலை(மாலை)- ஆனி
                 இரண்டாம்காலம்   -ஆவணி
                 அர்த்தசாமம்    -  புரட்டாதி


எனக்கொண்டு அந்த ஆறுமாதங்களிலாவது ஆறு அபிஷேகம் நடராசப்பெருமானுக்கு நடைபெறும்.தேவர்களுக்கு தினமும் ஆறுநேரஅபிஷேகம் நடைபெறுவதைத்தான் கோயில்களில் ஒரு வருடத்தில்ஆறு மாதங்களில் ஆறு அபிஷேகத்தை நடத்துகிறார்கள்.


ஆனிமாத உத்தரநட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ”ஆனித்திருமஞ்சனம்”  என்று அழைப்பர். மார்கழித்திருவாதிரையிலும்;இ சித்திரைத்திருவோணத்திலும்இ ஆனிஉத்தரத்திலும் மாசிஇ ஆவணிஇ புரட்டாதி ஆகிய மாதங்களில் பூர்வபக்க சதுர்த்தசிகளிலும்-அதாவது அமாவாசைக்குப் பின்வரும்14ம் நாளிலும் அபிஷேகம் நடைபெறும். மார்கழித்திருவாதிரை, ஆனிஉத்தரம் ஆகிய காலங்களில் சிதம்பரத்தில் பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெறும். ஆனி உத்தரத்துக்கு முதல்நாள் இரதோற்சவம். சிவகாமிஅம்பாள் சமேத ஆனந்தநடராசர் சிற்சபையை விட்டுஎழுந்தருளித்தேரில் உலா வந்து பின் ஆயிரங்கால்மண்டபத்துக்கு எழுந்தருளுவார். இரவூவிஷேட அபிஷேகம் நடைபெறும். உதயத்தில் தரிசனமும் நடைபெற்ற பின்னர் நடராசப்பெருமான் சிற்சபைக்கு எழுந்தருளுவார். இதே போல மார்கழித்திருவாதிரைக்கு முதல் நாளும் தேர்உற்சவம் நடைபெற்றுப்பின்மறுநாள் அபிஷேகம் நடைபெற்று நடராசப்பெருமான் எழுந்தருளும் காட்சி நடைபெறும்.நடராசப்பெருமானின் தரிசனத்தால் விளையூம் ஆனந்தம் பற்றியதிருமந்திரம் பின்வருமாறு.


             ”புளிக்கண்டவர்க்குப் புனலுறுமாப்போற்     கனிக்குந் திருக்கூத்துக்கண்டவர்க்கு எல்லாந்
             துளிக்குந் கண்ணீருடன் சோரு நெஞ்சத்திருள்  ஒளிக்கும் ஆனந்த அமுது ஊறும் உள்ளத்தே” –திருமந்திரம்


இதன் பொருள் புளியைக்கண்டவர்க்கு வாயில் நீர் ஊறுவதுபோல  திருக்கூத்துக்கண்டவர்க்கு இதயம் கனியூம். கண்ணீர் துளிக்கும் உடல் சோரும்.
நெஞ்சத்தில் உள்ள இருள் - அஞ்ஞானம் ஒளிக்கும் உள்ளத்தில் ஆனந்த அமுது ஊறும்.

நன்றி
திரு திருமதி முருகானந்தன்
 

 

ஆவணிஞாயிறு / Aavani nayiru.

ஆவணிஞாயிறு / Aavani nayiru.

எல்லா மாதங்களிலும் ஞாயிறு வருகின்ற போதிலும் ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சூரிய விரதத்திற்கும் வழிபாட்டிற்கும் சிறந்ததாகும். இம்மாதத்தில்  சூரிய பகவான் சிங்கராசியில் பிரவேசிப்பதால் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெறுகின்றது.


மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

 

ஆவணி மூலம்

ஆவணி மூலம்.

 மாணிக்கவாசக சுவாமிகளுக்காக சுந்தரேஷ்வரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளி அருள் பாலித்த தினம் இதுவாகும். அதாவது, மாணிக்கவாசக சுவாமிகளைப் பாண்டிய மன்னன்,அவர் தமது கடமையில் இருந்தும், மன்னனின் கட்டளையில்  இருந்தும் மீறியதற்காக, சிறையில் இட்டும், நெற்றியில் கல்லை வைத்து சூரியனை நோக்க வைத்தும் தண்டித்தார். சுவாமியவர்களை விடுவிப்பதற்காகச் சிவபெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டுவந்து அவரைச் சிறையினின்றும் மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திரத் தினமாகும்.

 

இக்காலத்தில், வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. பாண்டிய மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்தளிக்கப்பட்டன.

 

செம்மனைச்செல்வி(வந்தி) என்ற, பிட்டு விற்கும் ஏழை, மூதாட்டி, வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்தும் கடப்பாட்டுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். முதுமை காரணமாக, அவரால், தனது பகுதி வேலையை செய்யமுடியவில்லை.  ஏழை மூதாட்டியார் மற்ரவர்  உதவியை நாடினார். கூலியாள் வடிவில் வந்த, சிவபெருமான் உதிர்த்த பிட்டை ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார். ஊதியத்தை உண்டபின், தனது வேலையைச்  செய்ய என , மூதாட்டியிடம் விடைபெற்று அற்ரங்கரைக்குச் சென்றார்.

 

கூலியாள் தனது வேலையைச் செவ்வனே செய்யாது, அற்ரங் கரையில் படுத்துறங்கினார். இதை அவதானித்த மேற்பார்வை அதிகாரிகள், கூலியாளை எழுப்பி அவர் வேலையைச் திருந்தச்  செய்யப் பணித்தனர். அது பலனளிக்காத்து போகவே  கூலியாளுக்கு தண்டனை வழங்கிநர். அத் தண்டனை ஒரு சவுக்கடியாக அமைந்தது. சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன, பாண்டிய மன்னனும் உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தனன் என சமய நூற்கள் கூறுகின்றன.



இதன் காரணமாக இத்தினம் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.

 

சதுர்த்தி 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை

 

அறிவித்தல்

 

எதிர்வரும் 15.07.2018 அன்று  ஞாயிற்றுக்கிழமை  ஆலயத்தில் சதுர்த்தி இடம்பெறும்  என்பதனை  அடியார்களுக்கு  அறியத்தருகின்றோம்

 15.07.2018  ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி விரதம்

 

இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

 

பூசை நேரம் பற்றிய விபரங்கள்:

 


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும். 

இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.  

இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.

 

உபயம் 400 kr.

 

                     நன்றி

           ஆலய நிர்வாகசபையினர்

 

விநாயக சதுர்த்தி விரதம் /

விநாயக சதுர்த்தி விரதம்.

மாதந்தோறும் வரும் வளர்பிறைச் சதுர்த்தித் திதி விநாயகர் விரதத்திற்குச் சிறந்த நாளாகும். அந்நாளில் இளம்பிறைச் சந்திரனைப் பார்த்தலாகாது. பகலில் உபவாசம் இருந்து ஆலய தரிசனம் செய்த பின், இரவில் கொழுக் கட்டை, மோதகம் முதலியன விநாயகருக்கு நிவேதித்து உண்ணலாம். அந்நோன்பு நோற்பவர் விநாயகரை அறுகம் புல்லால் அர்ச்சிப்பது அளவிறந்த பலனைக் கொடுக்கும். இத்தினத்தில் விரதம் அனுட்டித்து உள்ளன்போடு வழிபடுவோர்க்கு விநாயகர் திருவருள் கடாட்சம்  கிடைக்கும் என்பது உறுதி.

சங்கடகரசதுர்த்தி.

தேய்பிறையில் வரும் சதுர்த்தியைச் சங்கடகரசதுர்த்தி என அழைத்து விரதமிருப்பர்.


ஆவணிச் சதுர்த்தி (ஆவணி மாதம் வளர்பிறை 4ம் நாள்)

 

ஆவணி மாதத்துப் பூர்வ பக்கச் சதுர்த்தி, விநாயகப்பெருமான் திருவவதாரம் செய்த தினமாகையால் விநாயக விரதத்திற்கும், வழிபாட்டிற்கும் சிறந்த நாளாகும். ஆவணி மாத  வளர்பிறைச் சதுர்த்தியில் அனுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதம், மற்றும் விரத பலனிலும் பார்க்கக் கூடுதலான பலனை நல்கும் எனச்சமய நூல்கள் சாற்றுகின்றன.

ஸ்ரீ நடராசப் பெருமானின் ஆறு அபிடேகங்களில், இத்தினத்தில் நடை பெறும் அபிடேகமும் ஒன்றாகையால், இத்தினம் நடேசர் தரிசனத்திற்கும் சிறந்ததாகும்.

 

மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006.