BergenHinduSabha

-விநாயக கவசம்

விநாயக கவசம்

கலி விருத்தம்
அற்புதக் கணபதி யமல போற்றியே
தற்பர சண்முக சாமி போற்றியே
சிற்பர சிவமகாதேவ போற்றியே
பொற்பமர் கெளரிநிற் போற்றி போற்றியே

 

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க

வாய்ந்த சென்னி அளவுபடா அதிகசவுந் தரதேக
மகோற்கடர் தாம் அமர்ந்து காக்க
விளரறநெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க

புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க.

 

கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங் கணக்கிரீடர் காக்க
நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க
நனிவாக்கை விநாயகர் தாம் காக்க
அவர்நகை துன் முகர் காக்க
அள்எழிற் செஞ்செவி பாசபாணி காக்க
தவிர்தலுறா திளங்கொடி போல் வளர்மணி
நாசியைச் சிந்திதார்த்தர் காக்க.

 

காமருபூ முகந்தன்மைக் குணேசர் நனி காக்க

களங் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த
பூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாயகன் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகத்தினைத் துலங்கே ரம்பர் காக்க.

 

பக்கம் இரண்டையுந் தராதரர் காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க

விளங்கிலிங்கம் வியாளபூடணர் தாம் காக்க
தக்குய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க
சகnத்தை அல்லல் உக்கணபன் காக்க
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க.

தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம் ஏகதந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்கு வார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல்பதும அத்தர் காக்க
சேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க.


அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர் தென்திசை காக்க
மிக்கநிருதியிற் கணேசுரர் காக்க
விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க
வாயுவிற் கசகர்ணன் காக்க
திகழ்உthhசி தக்கநிதிபன் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க.

ஏகதந்தர் பகல்முழுதும் காக்க
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக்கனகிருது காக்க
இராக் கதர்பூதம் உருவேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திரத்தால்
வருந்துயரும் முடிவிலாத வேகமுறு பிணிபலவும்
விலக்கு பாசாங்குசர் தாம் விரைந்து காக்க.

மதிஞானம் தவம் தானம் மானம் ஒளி
புகழ் குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம் தானியம் கிரகம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க.

வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரி யாதியெல்லாம் விகடர் காக்க
என்றிவ்வாறிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூ றொன்றும்
ஒன்றுறா முனிவரவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற

வச்சிரதேகம் ஆகி மின்னும்.

 

அருளியர்: காசிப முனிவர்

 

 

-திருவாசகம் – சிவபுராணம்

 

திருவாசகம் சிவபுராணம்

திருச்சிற்றம்பலம்

 

 

 

 

 

 

தொல்லை யிரும் பிறவிச் சூழுந்தளை நீக்கி 
அல்லலறுத்
 தானந்தம் ஆக்கியதே - எல்லை 
மருவா
 நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் 
திருவாசக
 மென்னந் தேன்.

நமச்சிவாய
 வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும்
 என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி
 ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க 
ஆகமம்
 ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன்
 அநேகன் இறைவன் அடிவாழ்க …..5

  
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க 
பிறப்பறுக்கும்
 பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க 
புறத்தார்க்குச்
 சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க 
கரங்குவிவார்
 உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 
சிரம்குவிவார்
 ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க …..10 

ஈசன்
 அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன்
 அடிபோற்றி சிவன் சேவடி போற்றி 
நேயத்தே
 நின்ற நிமலன் அடி போற்றி 
மாயப்
 பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி 
சீரார்
 பெருந்துறை நம் தேவன் அடி போற்றி …..15 

ஆராத
 இன்பம் அருளும் மலை போற்றி 
சிவன்
 அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் 
அவன்
 அருளாலே அவன் தாள் வணங்கிச் 
சிந்தை
 மகிழச் சிவ புராணம் தன்னை 
முந்தை
 வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். …..20 

கண்
 நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி 
எண்ணுதற்கு
 எட்டா எழில்ஆர் கழல் இறைஞ்சி 
விண்
 நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் 
எண்
 இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் 
பொல்லா
 வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் …..25 

புல்லாகிப்
 பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல்
 மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய்
 மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல்
 அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லா
 நின்ற இத் தாவர சங்கமத்துள் …..30

 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் 
மெய்யே
 உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் 
உய்ய
 என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற 
மெய்யா
 விமலா விடைப்பாகா வேதங்கள் 
ஐயா
 எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே …..35   

வெய்யாய்
 தணியாய் இயமானனாம் விமலா 
பொய்
 ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி 
மெய்
 ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
எஞ்ஞானம்
 இல்லாதேன் இன்பப் பெருமானே 
அஞ்ஞானம்
 தன்னை அகல்விக்கும் நல் அறிவே …..40 

ஆக்கம்
 அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் 
ஆக்குவாய்
 காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் 
போக்குவாய்
 என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் 
நாற்றத்தின்
 நேரியாய் சேயாய் நணியானே 
மாற்றம்
 மனம் கழிய நின்ற மறையோனே …..45 

கறந்த
 பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
சிறந்தடியார்
 சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
பிறந்த
 பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 
நிறங்கள்
 ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய்
 எம்பெருமான் வல்வினையேன் தன்னை …..50  

மறைந்திட
 மூடிய மாய இருளை 
அறம்பாவம்
 என்னும் அரும் கயிற்றால் கட்டி 
புறம்தோல்
 போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி 
மலம்
 சோரும் ஒன்பது வாயில் குடிலை 
மலங்கப்
 புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய …..55 

விலங்கு
 மனத்தால் விமலா உனக்கு 
கலந்த
 அன்பாகிக் கசிந்து உள் உருகும் 
நலம்
 தான் இலாத சிறியேற்கு நல்கி 
நிலம்
 தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி 
நாயிற்
 கடையாய்க் கிடந்த அடியேற்குத் …..60 

தாயிற்
 சிறந்த தயா ஆன தத்துவனே 
மாசற்ற
 சோதி மலர்ந்த மலர்ச்சுடரே 
தேசனே
 தேன்ஆர் அமுதே சிவபுரானே 
பாசமாம்
 பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே 
நேச
 அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் …..65


பேராது
 நின்ற பெருங்கருணைப் போராறே 
ஆரா
 அமுதே அளவிலாப் பெம்மானே 
ஓராதார்
 உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே 
நீராய்
 உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
இன்பமும்
 துன்பமும் இல்லானே உள்ளானே …..70   

அன்பருக்கு
 அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் 
சோதியனே
 துன்னிருளே தோன்றாப் பெருமையனே 
ஆதியனே
 அந்தம் நடுவாகி அல்லானே 
ஈர்த்து
 என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 
கூர்த்த
 மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் …..75 

நோக்கரிய
 நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே 
போக்கும்
 வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே 
காக்கும்
 என் காவலனே காண்பரிய பேர் ஒளியே 
ஆற்றின்ப
 வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற 
தோற்றச்
 சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் …..80 

மாற்றமாம்
 வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் 
தேற்றனே
 தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் 
ஊற்றான
 உண்ணார் அமுதே உடையானே 
வேற்று
 விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப 
ஆற்றேன்
 எம் ஐயா அரனே  என்று என்று …..85


போற்றிப்
 புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் 
மீட்டு
 இங்கு வந்து வினைப்பிறவி சாராமே 
கள்ளப்
 புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே 
நள்
 இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே 
தில்லை
 உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே …..90  

அல்லல்
 பிறவி அறுப்பானே  என்று 
சொல்லற்கு
 அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 
சொல்லிய
 பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர்
 சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 
பல்லோரும்
 ஏத்தப் பணிந்து. …..95

 

அருளியவர்: மாணிக்கவாசகர் சுவாமிகள் திருப்பெருந்துறையில்அருளியது

(எட்டாம் திருமுறை)

 

 

 

 

 

 

 

-கந்தர் அனுபூதி

கந்தர் அனுபூதி

அருளியவர்: அருணகிரிநாதர் சுவாமிகள்

 

 

காப்பு
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்(து) உருகத்
தஞ்சத்(து) அருள் சண் முகனுக்(கு) இயல்சேர்
செஞ்சொல் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக் கர ஆனை பதம் பணிவாம்.

 

நூல்
ஆடும் ப
ரி வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவில்
சாடுந் தனி யானை சகோதரனே. 1


உல்லாச
, நிராகுல, யோக விதச்,
சல்லாப
, விநோதனும் நீ அலையோ?

எல்லாம் அற
, என்னை இழந்த நலம்
சொல்லாய்
,
முருகா ! சுரபூ பதியே ! 2

வானோ புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ
? நவில் நான் மறையோ?
யானோ
? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ
? பொருளாவது சண்முகனே 3


வளைபட்ட கைம் மாதொடு
, மக்கள் எனும்
தளைபட்(டு) அழியத் தகுமோ
? தகுமோ?

கிளைபட்(டு) எழு சூர் உரமும்
, கியும்,
தொளைபட்(டு) உருவத் தொடு வேலவனே 4


மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந்து மொழிந்திலனே
அகமாடை
, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே 5


திணியான மனோ சிலைமீது
, உனதாள்
அணியார்
,
அரவிந்தம் அரும்பு மதோ
பணியா என
,
வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே 6


கெடுவாய் மனனே
, கதி கேள், கரவாது
இடுவாய்
,
வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. 7

அமரும் பதி
, கேள்,
அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே 8

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத்(து) எறியும்
நிட்டூர நிராகுல
, நிர்ப்பயனே 9

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மி
சை
வந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்

சூர்மா மடியத் தொடு வேலவனே 10


கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை
, மெய்ப் பொருள் பேசியவா
நாகாசல வேலவ  நாலுகவித்
த்யாகா  சுரலோக சிகாமணியே 11


செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன்
, பிறவான், இறவான்
சும்மா இரு
, சொல் அற என்றலுமே,

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. 12


முருகன்
, தனிவேல் முனி, நம் குரு என்(று)
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே
13


கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்(று)
உய்வாய்
, மனனே ! ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. 14


முருகன்
, குமரன், குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து
,
உணர்(வு) என்(று)
அருள்வாய்
பொரு புங்கவரும்
,
புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே 15


பேராசை எனும் பிணியில் பிணிபட்(டு)
,
ஓரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முதுசூர் படவேல் எறியும்
சூரா
, சுரலோக துரந்தரனே 16
.


யாம் ஓதிய கல்வியும்
, எம் அறிவும்
தாமே பெற
,
வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமே நடவீர்
, நடவீர் இனியே. 17


உதியா
, மரியா, உணரா, மறவா,
விதிமால் அறியா
, விமலன் புதல்வா,
அதிகா
, அநகா, அபயா  அமரா
பதி காவல்  சூர பயங் கரனே. 18


வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப் படினே. 19

ரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா
உபதேசம் உணர்த்தியவா !
விரிதாரண
! விக்ரம வேள் ! இமையோர்
புரிதாரக ! நாக புரந்தரனே ! 20

.
கருதா மறவா நெறிகாண
, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா  சுர சூர விபாடணனே 21

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி
,
மேருவையே 22

அடியைக் குறியாது அறியா மையினான்
முடியக் கெடவோ
? முறையோ? முறையோ?

வடி விக்ரம வேல் மகிபா
, குறமின்
கோடியைப் புணரும் குண பூதரனே 23

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன்
, அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த
,
நெடும்
போர் வேல  புரந்தர பூபதியே 24


மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ  அடியேன் அலையத் தகுமோ
?
கையோ
, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய்  மயில் ஏறிய சேவகனே 25


ஆதாரம் இலேன்
,
அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத மன
அதீதா சுரலோக சிகாமணியே ! 26

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே ! விதியின் பயன் இங்கு இதுவோ
?

பொன்னே ! மணியே ! பொருளே ! அருளே !
மன்னே ! மயில் ஏறிய வாகனனே ! 27


ஆனா அமுதே ! அயில் வேல் அரசே !
ஞானாகரனே நவிலத் தகுமோ
?
யான் ஆகிய என்னை விழுங்கி
, வெறும்
தானாய் நிலை நின்றது
, தற்பரமே. 28

 
இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
,
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
,
மல்லேபு
ரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே ! 29


செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
,
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவற்கு இசைவிப் பதுவே
? 30

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே !
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே ! 31


கலையே பதறிக்
, கதறித் தலையூ(டு)
அலையே படுமாறு அதுவாய் விடவோ
?

கொலையே பு
ரி வேடர் குலப் பிடிதோய்
மலையே ! மலைகூறிடு வாகையனே. 32


சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே !
கந்தா ! முருகா ! கருணாகரனே ! 33

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல ! சண்முகனே !
கங்கா நதிபால ! க்ருபாகரனே ! 34

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண
, மலர்க் கழல் என்று அருள்வாய்
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா ! சுர பூபதியே ! 35


நாதா ! குமரா ! நம ! என்று அரனார்
ஓதாய் என ஓதியது
, எப்பொருள் தான்
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா ! குறமின் பத சேகரனே ! 36

கி
ரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
ரி
வாரம் எனும் பதம் மேவலையே
பு
ரி
வாய் மனனே ! பொறையாம் அறிவால்
ரிவாய் அடியோடும் அகந்தையையே. 37


ஆதாளியை
, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை
,
ஆண்டது செப்புமதோ !
கூதாள கிராத குலிக்கு இறைவா !
வேதாள கணம் புகழ் வேலவனே ! 38


மாஏழ் சனனம் கெட
, மாயைவிடா,
மூஏடணை என்று முடிந்திடுமோ !
கோவே ! குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே ! 39


வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
,
மனையோடு தியங்கி மயங்கிடவோ
?
சுனையோடு
, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு
, இதணோடு திந்தவனே ! 40

.
சாகாது எனையே சரணங் களிலே
கா கா
, நமனார் கலகம் செயும் நாள்
வாகா ! முருகா ! மயில் வாகனனே !
யோகா ! சிவஞான உபதேசிகனே ! 41

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று
,
உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று
,
அறியாமையும் அற்றதுவே. 42

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
,

பேசா அ
னுபூதி பிறந்ததுவே. 43

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
?
வீடும்
, சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும்
,
புனமும் கமழும் கழலே 44

கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ
?

குரவா ! குமரா ! குலிசாயுத ! குஞ்
சரவா ! சிவயோக தயாபரனே ! 45

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
,
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
,
கந்தா ! கதிர் வேலவனே ! உமையாள்
மைந்தா ! குமரா ! மறை நாயகனே ! 46

ஆறு ஆறையும் நீத்து
,
அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
?

சீறாவரு சூர் சிதைவித்து
, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே ! 47

அறிவு ஒன்று அற நின்று
,
அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற
, பிரான் அலையோ?

செறிவு ஒன்று அற வந்து
, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே ! 48

தன்னந் தனி நின்றது
,
தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ
?

மின்னும் கதிர் வேல் விகிர்தா
, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே ! 49

மதிகெட்டு அறவாடி
, மயங்கி,
அறக்
கதிகெட்டு
,
அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ! ஞான சுகாதிப ! அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே ! 50

உருவாய் அருவாய்
,
உளதாய் இலதாய்
மருவாய் மலராய்
,
மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க்
,
கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய்
, அருள்வாய் குகனே ! 51

 

அருளியவர்: அருணகிரிநாதர் சுவாமிகள்

 

 

 

கந்தர் சஷ்டி கவசம்

கந்தர் சஷ்டி கவசம்

அருளியவர்: ஸ்ரீ தேவராய சுவாமிகள்


 

 


காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம் போம்; நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்

நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்

சஷ்டி கவசம் தனை.


அமர ரிடர்தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி.

 

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி யாட


மையல் நடனஞ்செய்யும் மயில் வாகனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

வரவர வேலா யுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக


இந்திரன் முதலா எண்டிசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக


ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவண பவனார் சடுதியில் வருக


ரவண பவச  

ரிவண பவச ரி ரி ரி ரி  ரி ரி ரி

விநபவ சரவண வீரா நமோநம

நிபவ சரவண நிறநிற நிறென


வசுர வணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை ஆளும் இளையோன் கையில்

பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும்


பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்

உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்


கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக


ஆறு முகமும் அணிமுடி ஆறும்

நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்


ஈராறு செவியில் இலகுகுண் டலமும்

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

பல் பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்


முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழ குடைய திருவயி றுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்


இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென


நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி


டுடுடுடு  டுடுடுடு  டுடுடுடு  டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து


எந்தனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோ தனென்று


உன் திருவடியை உறுதியென் றெண்ணும்

எந்தலை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க


அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க


நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத்திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க


கன்னம் இண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்தின வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க


வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க

பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதி னாறும் பருவேல் காக்க


வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க

 

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வடிவேல் காக்க

பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

 

ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க

கைகள் இரண்டும் கருணைவேல் காக்க

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க

பின்கை இரண்டும் பின்னவள் இருக்க

 

நாவில் சரஸ்வதி நற்றுணை யாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க

 

அடியேன் வதனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அரையிருள் தன்னில் அனையவேல் காக்க


ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

 

தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

 

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

 

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்

 

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்

 

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

 

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

 

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோட

 

படியினில் முட்ட பாசக் கயிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு

 

முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு


குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலதுவாக

விடு விடு வேலை வெகுண்டது ஒடப்


புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்


ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு


குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி

பக்கப் பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத் தரணை பருஅரை யாப்பும்


எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீஎனக் கருள்வாய்

ஈரேழு உலகமும் எனக் குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா


மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன் திருநாமம்

சரவண பவனே சைலொளி பவனே

திரிபுர பவனே திகழொளி பவனே


பரிபுர பவனே பவமொளி பவனே

அரிதிரு மருகா அமரா வதியைக்

காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்

கந்தா குகனே கதிர்வே லவனே


கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை அழித்த இனியவேல் முருகா

தனிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

 

பழநிப் பதிவாழ் பாலகுமாரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா

சமரா புரிவாழ் சண்முகத் தரசே


காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா இருக்க யானுனைப் பாட

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினேன் ஆடினேன் பரவச மாக


ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியில் அணிய

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருளாக


அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலா யுதனார்

சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க


வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசம்


வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செய்தால்

பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்


பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து

மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்


கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி


நேசமுடன் ஒரு நினைவது வாகிக்

கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

 

ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்

திசைமன்ன ரெண்மர் செயலது  அருளுவர்

மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்


நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்

கந்தர்கை வேலாம் கவசத் தடியை


வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்


சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்

வீரலட்சுமிக்கு விருந்துண வாகச்

சூரபத் மாவைத் துணித்தகை யதனால்

இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த


குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி!


தேவர்கள் சேனா பதியே போற்றி!

குறமகள் மனமகிழ் கோவே போற்றி!

திறமிகு திவ்விய தேகா போற்றி!

இடும்பா யுதனே இடும்பா போற்றி!


கடம்பா போற்றி கந்தா போற்றி!

வெட்சி புனையும் வேளே போற்றி!

உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!


சரணம் சரணம் சரவண பவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்!

 

அருளியவர்: ஸ்ரீ தேவராய சுவாமிகள்

 

 

பஜனை பாடல்கள்

1)   கிருஷ்ணா ராமா, கோவிந்தா, நாராயணா ( 2)

மாதவா, கேசவா, ஹரி நாராயணா (2)

கிருஷ்ணா ராமா கோவிந்தா நாராயணா (1)

ஸ்ரீ வேணு கோபால, கிருஷ்ணா (2)

மாதவா, மது சூனா, நாராயணா (2)

 

 

2)  சீராப்தி சயன, நாராயணா (2)
ஸ்ரீ லக்ஷ்மி ரமணா, நாராயணா (2)
நாராயணா, ஹரி  நாராயணா (2)
நடஜன பரிபால, நாராயணா (2)
வைகுண்ட வாசா, நாராயணா (2)
வைதேகி மோகன, நாராயணா (2)