BergenHinduSabha
-சிரமதானம் 25.05.2012 இரவு 20.30 மணி / Invitasjon til dugnad PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Tuesday, 15 May 2012 07:07

சிரமதானம் 25.05.2012 இரவு 20.30 மணி


ஆலய நிர்வாகசபையினரால் 25.05.12 வெள்ளிக்கிழமையன்று சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிரமதானம் சிறப்பாக நடைபெற உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


இடம்:  ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகா; ஆலயம்
 

காலம்: வைகாசி 25 வெள்ளிக்கிழமை இரவு 20.30 மணி
(இரவுப் பூசையின் பின்)   

 

மேலதிக விபரங்களிற்கு:

                                           திரு. சிவகுமார் கதிரவேலு தொலைபேசி இலக்கம்; 47383901

                                          திரு. கோபிநாத் கனகரட்ணம் தொலைபேசி இலக்கம் 98828515

 

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா       

 

Invitasjon til dugnad

Det inviteres herved til dugnad i templet. Styret ber deres støtte og hjelp til å gjennomføre denne dugnaden.  

Sted

Eelumalai Sri Aanantha Sithi Vinayagar kovil

Tid

Fredag 25. mai 2012 kl. 20.30 (etter kveldspooja)

 

For ytterligere opplysninger, vennligst ta kontakt med Sivakumar Kathiravelu, (tlf. 473 83 901) eller Gopinath Kanagaratnam (tlf. 988 28 515).

 

Vel møtt og håper at så mange som mulig har anledning til å delta.

 

Styret

Bergen Hindu Sabha


 

Last Updated on Tuesday, 15 May 2012 07:15
 
-அறிவித்தல் அலங்காரஉற்சவ தொடர்புகளுக்கு PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Monday, 07 May 2012 07:59

அறிவித்தல்

அருள்மிகு ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகர் ஆலயத்தின் 8 ம் ஆண்டு வருடாந்த அலங்கார உற்சவம் வெள்ளிக்கிழமை 01.06.2012 தொடங்கி செவ்வாய்க்கிழமை 12.06.2012 வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு  தொடர்புகளுக்கு..

 

உபயம் எடுக்க விரும்புவோர்கள்

 

திருமதி. சிவனேஸ்வாரி பாலசிங்கம்         தொலைபேசி இல. 55 26 60 64 ஃ 992 99 864 


     
கலைநிகழ்ச்சிகள் வழங்க விரும்புவோர்கள்


திருமதி. நந்தினி குணலிங்கம் அவர்களுடன் வெள்ளிக்கிழமை 25.05.12 இற்கு முன் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி இல. 55 16 87 60 / 454 10 196

 

அன்னதானம் வழங்க விரும்புவோர்கள்

திருமதி. நந்தினி குணலிங்கம் அல்லது திருமதி. சிவனேஸ்வாரி பாலசிங்கம்.  
 
 
பொருளுதவிகள் அல்லது பணவுதவிகள் வழங்க விரும்புவோர்கள்


திரு. கோபிநாத் கனகறட்ணம் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.  தொலைபேசி இல. 55 16 77 33 / 988 28 515

நிர்வாகசபை
பேர்கன் இந்து சபா
 

Last Updated on Monday, 07 May 2012 08:04
 
-அலங்கார உற்சவப் பக்திப்பெருவிழா 2012 PDF Print E-mail
Written by உபயகாரர்கள் - ஆலய நிர்வாக சபையினர்   
Friday, 04 May 2012 10:47

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

ஸ்ரீ கணபதி துணை

 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானை

காதலால் கூப்புவார் தம்கை  

 

மலைகளும் குன்றுகளும் அருவிகளும் ஒளிரும்

வான்மழையூம் பனிமழையூம் ஒருங்கிணையப் பொழியூம்

நள்ளிரவு  சூரிய நோர்வே தேசத்து போர்கன் மாநகர்தனில் அமர்ந்து

அருள்பாலிக்கும் ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகப்பெருமான்ழூ சன்னிதான 8 ம் ஆண்டு நந்தனவருட அலங்கார உற்சவப் பக்திப் பெருவிழா விஞ்ஞாபனம்

 

நிகழும் மங்களகரமான நந்தனவருடம் நம்பிக்கையோடு தனைநாடி வரும் அடியவர்க்கு தும்பிக்கையானாம் ஏழுமலை சூழ்

ஸ்ரீ ஆனந்தசித்தி விநாயகப்பெருமானின் வரம் அருள்தர எல்லோரும் கரம்பிடித்து நந்தனவருடம் உத்தராயண வைகாசி மாத 19 ம் நாள் (01.06.2012) வளர்பிறை துவாதசி சித்தயோகமும் சுவாதி நட்ச்சத்திரமும் கூடிய சுப மங்களநாளில் அலங்கார உற்சவப் பக்திப்பெருவிழா நடைபெற இறையருள் கூடியுள்ளது.

 

கணபதி வரம்பெற அனைவரையும் சன்னிதானத்திற்கு பெரும் திரளாக வருகைதந்து சகல நலனும் பெற்றேகும் வண்ணம் வேண்டுகிறோம் .

 

உற்சவ ஆரம்பம்: 01.06.2012 வெள்ளிக்கிழமை

உற்சவ பூர்த்தி: 12.06.2012 செவ்வாய்க்கிழமை

 

அபிசேக பூசை – கிரியாகால விபரம்

 

31.05.12 வியாழக்கிழமை

 

மாலை 6.00 மணிக்கு விநாயகவழிபாடு, அநுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

01.06.12 வெள்ளிக்கிழமை – 1 ம் திருவிழா

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

 

 

02.06.12 சனிக்கிழமை – 2 ம் திருவிழா, வைகாசி விசாகம்

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமான் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானைக்கு விசேட அபிசேகம்

 

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

 

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் முருகப்பெருமான், வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா

 

 

03.06.12 ஞாயிற்றுக்கிழமை – 3 ம் திருவிழா, பாரணை விரதம், தீப பூசை

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமான் கருமாரியம்மன் மீனாட்சியம்மனிற்கு விசேட அபிசேகம்

 

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, தீப பூசை, விநாயகப்பெருமான் அம்மன் வீதியுலா

 

 

04.06.12 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

 

05.06.12 செவ்வாய்க்கிழமை – 5 ம் திருவிழா

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்

 

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

 

06.06.12 புதன்கிழமை – 6 ம் திருவிழா

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

 

 

07.06.12 வியாழக்கிழமை – 7 ம் திருவிழா, சங்கடகர சதுர்த்தி

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

 

 

08.06.12 வெள்ளிக்கிழமை - சப்பறத்திருவிழா

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானிற்கு விசேட அபிசேகம்

 

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

 

 

09.06.12 சனிக்கிழமை - தேர்த்திருவிழா

 

காலை 8:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானுக்கு விசேட அஷ்டோத்திர சங்காபிஷேகம், விசேட திரவிய ஹோமம்

 

காலை 10:15 மணிக்கு பூசை ஆரம்பம்

 

 

காலை 10:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, வேதபாராயணம், திருமுறை ஓதல்

 

 

காலை 11:45 மணிக்கு தேர் வீதிவலம், பிராச்சித்த அபிசேகம்

 

 

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா

 

 

 

10.06.12 ஞாயிற்றுக்கிழமை - தீர்த்தத்திருவிழா

 

காலை 8:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானுக்கு விசேட அபிசேகம்

 

காலை 10:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

காலை 10:30 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, சுவாமி வீதியுலா

 

காலை 11:30 மணிக்கு தீர்த்த உற்சவவிழா

 

 

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

மாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா, ஆச்சாரியார் உற்சவம்

 

 

 

11.06.12 திங்கட்கிழமை பூங்காவனம்

 

மாலை 5:30 மணிக்கு சங்கற்பம், விநாயகப்பெருமானுக்கு விசேட அபிசேகம்.

 

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

மாலை 7:45 மணிக்கு வசந்த மண்டப விசேட பூசை, ஊஞ்சல்விழா, சுவாமி வீதியுலா

 

 

 

12.06.12 செவ்வாய்க்கிழமை வைரவர் சுவாமிமடை

 

மாலை 6:00 மணிக்கு வைரவருக்கு அபிசேகம்

 

மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்

 

 

 

உபயம் திருவிழா: kr. 1500,-

உபயம் வைரவர் மடை: kr. 400,-

 

 

இவ்விழாவை ஆலய பிரதமகுரு சிவாஹம கிரியாதிவாகரன் பிரம்மஸ்ரீ கௌரிபால சிவாச்சாரியார் அவர்களும்,

உதவிக்குரு பாலசுப்பிரமணியம் பஞ்சாட்ச்சரம் சர்மா அவர்களும் சேர்ந்து சிறப்பாக நடாத்துவார்கள்.

 

 

விழாக்காலங்களில் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

 

 

குறிப்பு: அபிசேகங்கள் பூசைகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பிக்கும் என்பதை அடியார்களிற்கு அறியத் தருகிறோம்.

 

 

சுபமங்களம்

அனைவரும் வருக ! திருவருள் பெறுக !

 

 

இங்ஙனம்

உபயகாரர்கள் - ஆலய நிர்வாக சபையினர

Last Updated on Friday, 04 May 2012 12:32
 
-விசேட நாட்கள் 01.05.2012 – 31.05.2012 PDF Print E-mail
Written by நிர்வாகசபை   
Wednesday, 25 April 2012 10:08

விசேட நாட்கள் 01.05.2012 – 31.05.2012

 


05.05.2012 சனிக்கிழமை – சித்திரா பூரணை விரதம் 
 

இன்றைய தினத்தில் கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும்   உருத்ராபிஷேகத்துடன் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:15 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடார்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

 

08.05.2012 செவ்வாய்க்கிழமை – சங்கடகர சதுர்த்தி 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடார்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
உபயம் – kr. 350,-

 

12.05.2012 சனிக்கிழமை – நடேசரபிஷேகம்


இன்றைய தினத்தில் சிவலிங்கத்திற்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்

மாலை 5:45 மணிக்கு அபிசேகம்
மாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம் 
உபயம் – kr. 350,-

 

20.05.2012 ஞாயிற்றுக்கிழமை – கார்த்திகை விரதம்.


இன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடா;ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் 
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-


24.05.2012 வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம் 


இன்றைய தினத்தில் விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.


பூசை நேரம் பற்றிய விபரங்கள்


மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடார்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்  
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் – kr. 350,-

இத் தினங்களிற்கு உபயம் எடுக்க விரும்புவோர்கள் திருமதி சிவனேஸ்வாரி பாலசிங்கம் தொலைபேசி இல. 55 26 60 64 / 992 99 864 அவர்களுடன் தொடார்பு கொள்ளவும்.

நிர்வாகசபை
போர்கன் இந்து சபா
 

Last Updated on Wednesday, 25 April 2012 10:30
 
-minnemarkering for flere tusen døde tamiler på Sri Lanka under krigen PDF Print E-mail
Written by Styret   
Tuesday, 08 May 2012 12:06

Minnemarkering minnemarkering for flere tusen døde tamiler på Sri Lanka under krigen

 

Bergen Hindu Sabha vil holde minnemarkering for flere tusen døde tamiler på Sri Lanka under krigen.

 

Sted: Eelumalai Sri Aanantha Sithi Vinayagar kovil

Tid: Fredag 11. mai kl. 20.15

 

 

Hilsen

Styret i Bergen Hindu Sabha

போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூறும் நினைவுநாள்  

 

இலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூறும்

முகமாக பேர்கன் இந்து சபாவினால் விசேட பூசை வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

 

இடம்;: ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகார் ஆலயம்

 

காலம்: வைகாசி 11 வெள்ளிக்கிழமை மாலை 08.15 மணி

 

நிர்வாகசபை

பேர்கன் இந்துசபா

Last Updated on Tuesday, 08 May 2012 12:14
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 Next > End >>

Page 1 of 7